சாலையில் கிடந்த $ 1,500 க்கும் அதிகமான பணத்தை ஒப்படைத்த நபர்

சாலையில் கிடந்த 1500 டொலர் இருந்த அட்டைப்பெட்டியை நபர் ஒருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் Metro Vancouver Domino’s Pizza கடையின் உரிமையாளர் Gary Josefczyk. இவர் தனது கடையில் நன்கொடையாக கிடைக்கும் பணத்தினை B.C-யின் குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அவ்வாறு கடையில் நன்கொடையாக சேர்ந்த பணத்தினை ஒரு பெரிய அட்டைப் பெட்டியினுள் வைத்து தன் காரின் மேற்கூரையில் கட்டி வைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியில் அந்த அட்டைப்பெட்டி தவறி விழுந்துள்ளது. பணப்பெட்டி தவறி விழுந்ததை உணர்ந்த அவர் உடனே பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் Shane Griffin என்பவர் அந்த 1500 டொலர் பணப்பெட்டியை சாலையில் கண்டெடுத்ததாக கூறி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து Shane Griffin “இதனை நான் சாதாரணமாக தான் செய்தேன். அந்த பணத்தை நான் எடுத்துச்சென்றிருந்தால் என்னால் இரவில் தூங்கியிருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து Gary Josefczyk “எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகத்தில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இச் சம்பவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்” என தெரிவித்துள்ளார்.