ஸ்காபரோ GTA Square இல் கார் ஒன்று உள் நுளைந்ததால் விபத்து

கனடாவின் ஸ்காபரோ Middlefield and Finch ல் அமைந்திருக்கும் வட அமெரிக்காவின் தமிழருக்கு சொந்தமன முதலாவது உள்ளக வணிக வளாகமான GTA Square இன் பிரதான தளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றினுள் இன்று அதிகாலை கார் ஒன்று உள் நுளைந்ததால் விபத்துச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வணிக வளாகத்தில் எதிரில் உள்ள வீட்டுத் தொகுதியின் நிலக்கீழ் வாகன நிறுத்தத்திலிருந்து வெளியே வந்த கார் ஓடுபாதையிலிருந்து விலகி குறித்த பலசரக்கு வர்த்தக நிறுவனத்துக்குள் நுளைந்துள்ளது. இதனால் வர்த்தக நிறுவனத்தின் கண்ணாடிகள் உடைந்தும் ஒரு பகுதி சேதமடைந்தும் உள்ளது.

இவ் விபத்து வணிக வளாகம் திறப்பதற்கு முன்பே நிகழ்ந்ததனால் நபர்கள் எவருக்கும் பாதிப்பேற்படவில்லை. மேலும் காரினை ஓட்டி வந்தவர் ஒரு தமிழ் பெண் என்றும், அவருக்கும் இவ்விபத்தில் பாரிய பாதிப்பு இல்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.