அனைத்துலக தமிழர் மாநாடு – கனடா

வரும் பெப்ரவரி மாதம் 18 சனி, 19 ஞாயிறு நாட்களில் மாபெரும் அனைத்துலக தமிழர் மாநாடு கனடாவில் அனைத்துலக தமிழர் அமைப்புக்களின் முழுமையான பங்களிப்புடன் நடைபெறவுள்ளது

இதில் அனைத்துலக, கனடிய அரசியல் பிரமுகர்கள், மனித உரிமைவாதிகள், வழக்கறிஞர்கள், சமூகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வுகள் அனைத்துலக ரீதியாக முன்னெடுக்கப்படும் தமிழர் உரிமை வேண்டிய செயற்பாடுகளை குறிப்பாக ஐ.நா மனித உரிமை அமையத்தின் அமர்வையும் வலுப்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து வருகைதரும் பிரபல இசைக்கலைஞர்களின் இசைச்சங்கமமும் இதில் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு:

கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-646-7624