ரொறன்ரோ நகரத்தில் உள்ள Dufferin Mall பகுதியில் 40 வயது பெண்மணி தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டார்.
மாலை சுமார் 6.30 மணியளவில் போலீஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலை அடுத்து போலீஸார் விரைந்து வந்து படுகாயமுற்றிந்த அந்தப் பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிவைத்ததாகவும், இருப்பினும் சிகிச்சை பலனின்றி பின்னர் அந்த பெண் இறந்துவிட்டார் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் சந்தேகம் இருபதனால் இதை கொலை என்று கருதபட்டு பூரண விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.
மேலதிக தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை .










