Mexicoவில் கனடியப் பெண் ஒருவரை அடித்துத் துன்புறுத்திய சந்தேகநபர் கைது

Mexiocoவில் கனடியப் பெண் ஒருவரை அடித்துத் துன்புறுத்திய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக Mexican அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண்மணி ஒருவரை 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்து உதைத்த காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷீலா நாப் என்ற இந்த பெண் மெக்சிகோவில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நோவோ ஸ்கோட்டியா பகுதியை சேர்ந்தவர்.

மசத்லான் என்ற இடத்தில் உள்ள ஓர் ஆடம்பர விடுதியில், ஷீலா தன் குடும்பத்தாருடன் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த போது, இந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது.

இன்றைய தினம் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  Mexican அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.