ரொறன்ரோவில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற 31 வயதுடைய பெண்ணை June 15, 2011 இல் இருந்து காணவில்லையென்றும் அவரைக் கண்டுபிடிக்க உதவிபுரியுமாறு கனடியப் பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளது.

இறுதியாக Jane & Finch சந்திப்பில் June 15, 2011 இல் இறுதியாக இவர் காணப்பட்டார்.
150 ராத்தல் எடையுடையவர் என்றும் 5 அடி 5 அங்குலம் உயரமுடையவர் என்றும்
அவர் இடது மணிக்கட்டில் ஒரு வடு உள்ளது, இவரின் தலை முடியின் நிறம் கருப்பு ஆகும் என்று ரொறன்ரோப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவருடைய பாதுகாப்பையிட்டு தாங்கள் கவலைப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இலகத்திலோ அல்லது யார் தகவல் தருவது என்று தெரியாமல் தகவல் தர விரும்பினால் 416.222.8477 [416−222−TIPS] என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது Crime Stoppers என்ற முகப்பதிவுப் பக்கத்திலோ அல்லது www.222tips.com என்ற இணையத்திலோ தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










