பேஸ்புக் சமூக வலைத்தளம் 2012ம் ஆண்டு, இரண்டாம் காலாண்டில் பொதுக் கம்பனியாக (Public Company) மாற்றப்படவுள்ளதாக The Wall Street Journal (WSJ) செய்தி வெளியிட்டுள்து.
தற்போது பேஸ்புக் வலைதளம் அமெரிக்காவின் தனியார் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் உரிமையாளராக உலகின் மிக இளவயது கோடீஸ்வரரான Mark Zuckerberg உள்ளார்.
பேஸ்புக் பொதுக்கம்பனியாக மாற்றப்படும் பட்சத்தில், கம்பனியால் நிர்ணயிக்கப்பட்ட 100 பில்லியன் அமெரிக்க டொலர் பங்குப் பெறுமதியில், முதல் 10 பில்லியன் டொடர் பெறுமதியான பங்குகள் வெளியிடப்படும் என்று WSJ தெரிவித்துள்ளது.
இப் பங்கு வெளியீட்டினை உறுதி செய்யுமுகமாக, அதற்கான ஆரம்ப பொது விடுப்பினை (Initial public offering, அல்லது IPO) பேஸ்புக் உறுதி செய்திருக்கின்றது.
இதேவேளை இந்த முதற்கட்ட பங்கு வெளியீடு நிறைபெறும் வேளையில், பேஸ்புக் நிறுவன உரிமையாளர்Mark Zuckerberg, தற்போதுள்ள உலக பணக்காரர் வரிசையில் 52 ம் இடத்தில் இருந்து முதல் 20 இடங்களுக்குள் வருவதற்காக வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் கம்பனியின் சொத்துக்கள் மற்றும் பெறுமதி என்ற அடிப்படையிலும் கூகுள் இணையத்தின் பெறுமதியை விட பேஸ்புக்கின் பெறுமதி கூடக்கூடும் என்றும் பங்குச் சந்தை விற்பனர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது கூகுள் நிறுவனத்தின் செத்துமதிப்பு 57 பில்லியன் டொலராகவும், பேஸபுக்கின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டொலராகவும் காணப்படுகின்றது.










