விக்கிபீடியா இணையதளத்தின் ஆங்கில பதிப்பாக்கம் நாளை ஒரு நாள் நிறுத்திவைக்கப்படும்

சர்வதேச இணையதளங்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விக்கிபீடியா இணையதளத்தின் ஆங்கில பதிப்பாக்கம் நாளை ஒரு நாள் நிறுத்திவைக்கப்படும் என அறிவித்துள்ளது.

சர்வதேச இணையதளங்களை தணிக்கை செய்ய புதிய மென்பொருட்களை கொண்டுவருவதால் இணையதளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வது போன்றதாகும். 1800 விக்கிபீடியர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிலளித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இந்த சட்டம் இணையதள சுதந்திரத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாகும். எனவே எதிர்ப்பை தெரிவிக்க இந்த ஒரு நாள் சேவை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய இணையதள கலைகளஞ்சியமான (என்சைக்லோபீடியா) விக்கிபீடியா உலகில் உள்ள அனைவராலும் பார்வையிடப்படுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

என்று விக்கிபீடியா நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.