நியமன அறிவித்தல் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சினது மேற்கு மற்றும் மத்திய கனடாவிற்கான பணிப்பாளராக தனபாலன் மார்க்கண்டு பா.உ அவர்கள் தை மாதம் ஐந்தாம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும், திரு.றோய் விக்னராஜா அவர்கள் அமைச்சினது சர்வதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கனடியத் தமிழ் ஊடகங்களுடனான தொடர்பாடல்களைத் தனபாலன் அவர்கள் மேற்கொள்வார். மேலும் தனபாலன் அவர்களுக்கு உதவி தேவைப்படின் அவர் சார்பாக அல்லது அவருடன் சேர்ந்து, திரு.றோய் விக்னராஜா அவர்களோ அல்லது நானோ உங்களுடன் தொடர்பு கொள்வோம் என்பதையும் அறியத்தர விரும்புகிறேன்.

 
இங்ஙனம்
தங்கள் சேவையிலுள்ள
சாம் சங்கரசிவம்
தகவற்துறை அமைச்சர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்