இன்று கனடாவில் ‘நண்பன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. நண்பன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியினை அரங்கு நிறைந்த ரசிகர்களோடு தமிழ் ஸரார் குழுவினரும் பார்வையிட்னர்.
விஜய், சங்கர் கூட்டணி என்ற ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவந்திருக்கும்
நண்பன் திரைப்படம் அரங்கு நிறைந்த ரசிகர்களுடன் களைகட்டியது.
மூன்று மணித்தியாலப் படமாயிருந்தும் கூட திரைக்கதை ரசிகர்களை படத்திலிருந்து ஒருதுளியும் விலகாமல் வைத்தது சங்கரின் சிறப்பு.
நண்பனில் யாரின் நடிப்பையும் குறை கூற முடியாது. அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்
படம் தொடங்கி முடியும் வரை ரசிகர்களின் விசில் சத்தமும் கரகோசமும் நண்பனின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றது,
அதிலும் இலியானா வரும் காட்சிகளில் விசில் சத்தம் தூள்… அத்தோடு பலதடவைகள் ரசிகர்கள் (Repeat Audience) பார்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
பாடல் காட்சிகளில் சங்கரின் பிரம்மாண்டம் தெரிந்தாலும் சங்கரின் முந்தய பாடல்களான “வாஜி வாஜி….. ரண்டக்க ரண்டக்க…” பாடல் காட்சிகளின் தாக்கம் தெரிகின்றது. “இருகக்கானா….” பாடல் காட்சியமைப்பு நடனம் சூப்பர்…
சங்கரின் முதல் ரீமேக் படமாக இருந்தாலும் திரைக்கதை என்கின்ற பெரிய ஆயுதத்தோடும் சிறந்த நடிகர் தெரிவாலும் தரமான ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தினைத் தந்திருக்கிறார் இயக்குனர் சங்கர்.
தமிழ் சினிமாவில் ஹீரோயிஸத்திற்கு நண்பன் முற்றுப்புள்ளி வைப்பான் என்று எதிர்பார்கலாம்.
நன்றி : Tamil Star Cinema
www.tamilstar.com









